தமிழ்நாடு

சி.பா.ஆதித்தனார் 38வது ஆண்டு நினைவு நாள் : சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தி டிவி

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அடித்தட்டு மக்களுக்கும் அன்றாட செய்திகளை கொண்டு போய் சேர்த்த பெருமைக்குரியவர் சி.பா.ஆதித்தனார். தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் அரும்பாடுபட்ட அவரது 38ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு, தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குநர் சிவந்தி ஆதித்தன், தந்தி டிவி இயக்குநர் ஆதவன் ஆதித்தன் மற்றும் அவரது குடும்பத்தினரும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தினத்தந்தி, மாலைமலர், தந்தி தொலைக்காட்சி ஊழியர்கள் மரியாதை செலுத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்