தமிழ்நாடு

நடப்பாண்டிற்கான புதிய ரயில் அட்டவணை- தெற்கு ரயில்வே

புதிய ரயில் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.மேலும், தமிழகத்தில் முன்பதிவு இல்லாத புதிய ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நடப்பாண்டிற்கான புதிய ரயில் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த ரயில் அட்டவணைப்படி, பல ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்-மும்பை விரைவு ரயில், தாம்பரம்-நெல்லை அந்தியோதியா ரயில், பாண்டியன் விரைவு ரயில், சிலம்பு விரைவு ரயில், திருச்செந்தூர் விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில் உள்ளிட்ட பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - செங்கோட்டை இடையே புதிய முன்பதிவில்லாத அந்தியோதயா விரைவு ரயில் தினசரி காலை 7 மணிக்கு இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கவுகாத்தி மற்றும் திப்ரூகர் விரைவு ரயில்கள் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருச்சி-நாகூர் விரைவு பயணிகள் ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் விரைவு ரயில் காலை 8.30 மணிக்கு பதிலாக 8.00 மணிக்கு புறப்படும் என்றும்,

சென்னை எழும்பூர் - செங்கோட்டை விரைவு ரயில் இரவு 8.20 மணிக்கு பதிலாக, 8.40 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

அதேபோல் செங்கல்பட்டு - கச்சிகுடா விரைவு ரயில் மாலை 5.00 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும் என்று புதிய ரயில்வே அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி