தமிழ்நாடு

தாயை கொன்ற மகன்- காரணம் என்ன?; மனநிலை பாதிப்பால் கொலை நடைபெற்றதா?

மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தவர் தனது தாயை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தவர் தனது தாயை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கரூர் மாவட்டம் கணக்கபிள்ளையூர் பகுதியை சேர்ந்த முருகாயின் இளைய மகனான பொன்னுசாமி, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற பொன்னுசாமி, அங்கே இருந்த அவரது தாயார் முருகாயியை தான் வைத்திருந்த சிறிய கத்தியால் திடீரென கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த முருகாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி