தமிழ்நாடு

பெற்ற தாயை தவிக்கவிட்ட மகனுக்கு 3 மாதம் சிறை - கலெக்டர் அதிரடி! | IAS

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பெற்ற தாயை பராமரிக்க தவறிய மகனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்...

வாழவல்லான் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி இசக்கு மற்றும் மாலையம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இசக்கி உயிரிழந்த பின்னர், அவரது மனைவி மாலையம்மாள் உரிய பராமரிப்பின்றி இருந்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, தனது மூத்த மகன் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாலையம்மாள் அளித்த புகாரின் பேரில், அவரது மகன் முத்துக்குமார் மாதந்தோறும் தனது தாயாருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது மாலையம்மாளுக்கு, முத்துகுமார் பணம் வழங்காமல் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் முத்துக்குமாருக்கு மூன்று மாதம் சிறை தண்டன விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்