தமிழ்நாடு

வி.ஏ.ஓக்கள் போராட்டத்திற்கு தீர்வு காணுங்கள் - ஸ்டாலின்

கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்திற்கு, முதலமைச்சர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி

* சொந்த மாவட்டங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும், அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைககளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

* இந்த போராட்டத்தால், கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப்பும் தாமதத்திற்குள்ளாகி, காவிரி டெல்டா பகுதிகளில் மக்கள் போராட்டங்களில்

ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* கிராம நிர்வாக அதிகாரிகளின் அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி தொடர் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்