திருச்சி அருகே சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்பதன இயந்திரத்தை என்.ஐ.டி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 2 டன் காய்கறி மற்றும் பழங்களை இருப்பு வைக்கும் அளவில் சூரிய சக்தி குளிர்பதன இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை 17 வாரம் வரை பதப்படுத்தி வைக்க முடியும். என்.ஐ.டி இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் துவக்கி வைத்த சூரிய சக்தி குளிர்பதன இயந்திரம் முதற்கட்ட சோதனையில் வெற்றி பெற்றது.