Chengalpattu | Social Activist | பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய சமூக ஆர்வலர் #socialactivity #socialactivist #charleschinnakutty #thanthitv செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில், சமூக ஆர்வலர் சார்லஸ் சின்னகுட்டி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். தான் படித்த பள்ளியில் ஆண்டுதோறும் உதவிகள் வழங்குவது மனநிறைவு அளிப்பதாக தெரிவித்த அவர், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று சொந்த செலவில் மினரல் வாட்டர் வசதி ஏற்படுத்தித் தருவதாகவும் உறுதியளித்தார். மேலும், மாணவர்கள் ஒழுக்கத்துடன் இருந்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.