தமிழ்நாடு

Snake Bite | Student | School | வகுப்பறையில் நுழைந்த விஷப்பாம்பு - துடிதுடித்து பலியான மாணவன்

வகுப்பறையில் நுழைந்த விஷப்பாம்பு - துடிதுடித்து பலியான மாணவன்

thanthitv

Snake Bite | Student | School | வகுப்பறையில் நுழைந்த விஷப்பாம்பு - துடிதுடித்து பலியான மாணவன் வலங்கைமான் - பள்ளியில் பாம்பு கடித்த‌தில் மாணவன் பலி திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அரசுப் பள்ளியில், பாம்பு கடித்து 11 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வலங்கைமான் அடுத்துள்ள அரிதுவரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த சிவப்பிரகாஷ் என்ற மாணவன், வகுப்பறையில் புத்தகத்தை எடுத்த போது விஷப் பாம்பு தீண்டியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிவப்பிரகாஷை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவப்பிரகாஷிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்று அதிகாலை சிவப்பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பள்ளியில் வகுப்பறையில் விஷ பாம்பு கடித்து மாணவன் பரிதாபமாக உயிரிழந்து, அப்பகுதி  மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்