தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக சார்பில், அவர் பிரசாரம் செய்தார். இந்தியில் பேசி வாக்கு சேகரித்த அவருக்கு, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்த வேனில் பிரசாரம் செய்த அவர், பாஜக கூட்டணிக்கு வாக்கு அளிக்கும் படி கூறினார்.