கடந்த ஏப்ரல் மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற 12 வயது சிறுமி, அங்கிருந்த ஸ்மோக் பீடாவை சாப்பிட்டுள்ளார். இதன் பின் அவருக்கு தீவிர வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளான நிலையில், அவரை மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர். திரவ நைட்ரஜனால் செய்யப்பட்ட பீடாவை சாப்பிட்டதால், சிறுமிக்கு வயிற்றுக்குள் துளை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, 6 நாட்களுக்கு பின் மாணவி வீடு திரும்பினார். இருப்பினும் திரவ நைட்ரஜனால் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே, கர்நாடகாவில் திரவ நைட்ரஜனால் செய்யப்பட்ட ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்டு சிறுவன் ஒருவர் வலியால் துடிதுடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.