தமிழ்நாடு

அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள், அங்கபிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

தந்தி டிவி

முதல் படைவீடான திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. சஷ்டி விரதம் தொடங்கிய பக்தர்கள், 7 நாட்கள் தங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 2ஆம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சஷ்டி விழா, யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட பூஜை நடந்தது. சஷ்டி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கடலில் புனித நீராடி பச்சை காவி நிற உடைகள் அனிந்து கோவில் கிரி பிரகாரத்தில் அங்கபிரதட்சனம் செய்து விரதத்தை தொடங்கினர். இதுபோல் பெண்கள் அடிபிரதட்சனம் செய்து வழிபட்டனர்.

கும்பகோணம் : சஷ்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

இதேபோல், கும்பகோணத்தில் உள்ள 4ஆம் படைவீடான சுவாமிமலையில், ஏராளமான பக்தர்கள் திரண்டனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இன்று முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. வரும் 13ஆம் தேதி 108 சங்காபிஷேகம், சூரசம்ஹாரம் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. 14ஆம் தேதி காவிரியில் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி வைபவமும் நடைபெறுகிறது.

திருத்தணி : காப்பு கட்டுதலுடன் தொடங்கிய சஷ்டி விழா

ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகனுக்கு, மலர் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. வருகிற13ஆம் தேதி காலை, மாலை ஆகிய இரு வேளை லட்சார்ச்சனையும், மாலையில் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலியும், 14ஆம் தேதி நண்பகலில் உற்சவர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை : சஷ்டி விரதம் - காப்பு கட்டிய பக்தர்கள்

ஆறாம் படை வீடான பழமுதிர்சோலையில், சஷ்டி விழாவை முன்னிட்டு, பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். இதனையொட்டி, முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பழமுதிர்சோலையில் குவிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் முருகனை தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் : சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கந்தபுராணம் அரங்கேறிய பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலையிலேயே கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர். தினமும் காலை, மாலை இருவேளை சுவாமி ஊர்வலம் நடைபெற உள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்