தமிழ்நாடு

நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்.. பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15-நாள் நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தி டிவி

நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்.. பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15-நாள் நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவிகளிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபாவை டெல்லியில் தமிழக சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். நேற்றிரவு தமிழகம் அழைத்து வரப்பட்ட அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கேளம்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளிக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார் உரிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு பின்னர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது சிவசங்கர் பாபாவை 15-நாள் நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. முன்னதாக பலத்த பாதுகாப்புடன் சிவசங்கர் பாபா அழைத்து வரப்பட்டார். இதனிடையே பாபாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் முன்பாக மாணவர் அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை