மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் நினைவு பரிசு வழங்கினார். மாலை மலர் இயக்குநர் சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குநர் ஆதவன் ஆதித்தனும் கேடயம் வழங்கி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை கவுரவித்தனர். பின்னர் பேசிய, பாலசுப்பிரமணியன் ஆதித்தன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார்.