தமிழ்நாடு

"தினத்தந்தியை புது உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பா.சிவந்தி ஆதித்தனார்" - எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பா.சிவந்தி ஆதித்தனார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மணிமண்டப திறப்பு விழா நிகழ்ச்சியை தொடர்ந்து வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தமிழக அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர், விழாவில் பேசிய அவர், தினத்தந்தியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பா.சிவந்தி ஆதித்தனார் என்றும் சரியான நபரிடம் ஆதித்தனார் பொறுப்பை கொடுத்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் அண்ணா பாராட்டியதாகவும் புகழாரம் சூட்டினார். இதுபோல, பா.சிவந்தி ஆதித்தனாரை சென்னை மாநகர ஷெரீப்-ஆக நியமித்து அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர் என்றும் சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்ட போது திருச்சி அருகே முதல் சத்துணவு கூடத்தை கட்டிக் கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்