தமிழ்நாடு

பேட்டி அளித்ததால் கொலை மிரட்டல் - சிவகங்கையில் அதிர்ச்சி | Sivagangai

தந்தி டிவி

சிவகங்கை அருகே குடிநீர் தட்டுப்பாடு குறித்து பேட்டியளித்தவருக்கு ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நாட்டாக்குடி, இலந்தங்குடி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதாக நாட்டாகுடியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் பேட்டி ஒன்றில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இதற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் விமலாவின் கணவர் மணிமுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அச்சமடைந்த தங்கராஜ் கடந்த 2 நாட்களாக தலைமறைவாகி இருந்த நிலையில் சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் தனக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் மனு அளித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை