#sivagangai | #crimenews
BREAKING || ரவுடி கொ*லயால் சிவகங்கையில் திக்திக் - வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிரபல ரவுடி நவீன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்டவரின் வீடு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கல்லல் அருகே புரண்டி கிராமத்தில் நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்த நவீனை, 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியது. இந்தக் கொலை தொடர்பாக 7 பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்க காரைக்குடி தெற்குத் தெரு பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.