தமிழ்நாடு

Sivagangai பேசிக்கொண்டு இருக்கும் போதே முதியவரை கல்லால் கொடூரமாக தாக்கிய நபர்-அதிர்ச்சி வீடியோ

Sivagangai பேசிக்கொண்டு இருக்கும் போதே முதியவரை கல்லால் கொடூரமாக தாக்கிய நபர்-அதிர்ச்சி வீடியோ

thanthitv

#sivagangai | #shockingvideo

பேசிக்கொண்டு இருக்கும் போதே முதியவரை கல்லால் கொடூரமாக தாக்கிய நபர் - அதிர்ச்சி வீடியோ

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், முதியவர் ஒருவர் கல்லால் கொடூரமாக தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் அந்த காட்சிகளை பார்க்கலாம்...

மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை, பாலு என்பவரது வீட்டின் அருகே பாதையை மறைக்கும் வகையில் நிறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு பாலு கேட்டதாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த பாலமுருகன் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து பாலுவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் படுகாயம் அடைந்த பாலு மீட்கப்பட்டு முதலில் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Thoothukudi | Police SI | கைதுசெய்ய சென்ற SI மீது அரிவாளால் தாக்குதல்.. தூத்துக்குடியில் பயங்கரம்

Governor Arlekar | "ஆளுநர் உரையை முழுமையாக வாசித்தது திருப்தியை தருகிறது" -ஆளுநர் அர்லேகர் மகிழ்ச்சி

RTO Office Raid | Tamilnadu | தமிழகத்தின் முக்கிய RTO அலுவலகங்களில் திடீர் ரெய்டு

Nirmal Kumar | TVK | CM Vijay | "CM விஜய்யின் முதல் போராட்டமே அதுதான்..." - அமைச்சர் நிர்மல் குமார்

White paper | CTR Nirmal |"மின்சாரவாரியம் சார்பாக வெள்ளை அறிக்கை" அமைச்சர் நிர்மல் கொடுத்த அப்டேட்