கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் 40 லட்ச ரூபாய் செலவில் 6ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் மனிதன், விலங்குகளின் எலும்பு கூடுகள், முதுமக்கள் தாழிகள், தங்க நாணயம், உறைகிணறு, உலைகலன், இணைப்பு குழாயாக பயன்படுத்தப்பட்ட பானைகள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வரிசையில் தற்போது இரண்டு அடுக்குகளுடன் கூடிய செங்கல் கட்டட சுவர் கண்டறியப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட குழியின் 4 அடி ஆழத்தில் 2 மீட்டர் நீளத்திற்கு சுவர் இருப்பதாக தொல்லியத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.