திருப்பத்தூரில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில், ஆயுதப்படை காவலரான யோகேஸ்வரன் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் வங்கியின் கழிவறைக்கு சென்ற அவர், திடீரென தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், யோகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.