#Sivagangai #SullanMadhan #TNpolice #ThanthiTV
Sivagangai Sullan Madhan Case | சிவகங்கை சுள்ளான் மதன் கொ*ல சம்பவம் - முக்கிய குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ் சிவகங்கையில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மிதுன் மாணிக்கம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. முன்விரோதம் காரணமாகப் பழிவாங்கும் நோக்கில் கொலை நடந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சமூக வலைதளங்களில் இரு தரப்பினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் பதிவுகள் வெளியிட்டதாகக் கூறப்படும் நிலையில், கடந்த இரண்டு நாட்களில் 36 சமூக வலைதளக் கணக்குகளை சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.