தமிழ்நாடு

மூடப்பட இருந்த அரசு பள்ளியின் புது தோற்றம் - 8 மாணவர்கள் படித்த நிலையில் இன்று 67 ஆக உயர்வு

தமிழக அரசால் மூடப்பட இருந்த பள்ளிகளில் ஒன்றாக இருந்த அரசு பள்ளி இன்று கிராம மக்களின் முயற்சியால் புது பொலிவு பெற்றுள்ளது.

தந்தி டிவி

மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் தமிழகத்தில் மூடப்பட இருந்த இரண்டாயிரத்து 500 பள்ளிகளில் ஒன்றாக இருந்தது, சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை அரசு தொடக்கப்பள்ளி...

வெறும் எட்டு மாணவர்கள் மட்டும் படித்து வந்த இந்த பள்ளியில் கிராம மக்களின் முயற்சியால் தற்போது 67 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி மூடப்பட போவதாக செய்தி அறிந்த கிராம மக்கள், பள்ளியின் தலைமை ஆசிரியை அழைத்து பேசி, பள்ளிக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக திட்டமிட்டதோடு, சுமார் 15 லட்ச ரூபாய் செலவில் பள்ளியை புதுப்பித்தனர்.

ஸ்மார்ட் கிளாஸ் வசதி, வேன் வசதி என புத்துயிர் பெற்ற இந்த பள்ளி தற்போது தனியார் பள்ளிக்கு இணையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அரசுப் பள்ளியின் அடிப்படைத் தேவைகள் தீர்வு காண இது போன்ற முயற்சிகள் இன்று அவசியமாயிற்று...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்