தமிழ்நாடு

EB பெயர் சொல்லி உங்கள் வீட்டுக்கும் இப்படி வரலாம் உஷார்- சொன்னதை நம்பி பணத்தை இழந்து குமுறும் மக்கள்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், மின்வாரியத்தில் இருந்து வருவதாகக்கூறி, வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டி 50 ரூபாய் வசூலித்து, 2 பெண்கள் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் கிராமத்திற்கு வந்த இரண்டு பெண்கள், தாங்கள் மின்வாரியத்தில் இருந்து வருவதாகக்கூறி, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, மின் இணைப்பு பெட்டியில் 11 இலக்க எண் கொண்ட ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றும், அப்படி ஒட்டினால் மட்டுமே இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும் கூறியுள்ளனர். இதனை நம்பிய அப்பகுதி மக்கள், ஐம்பது ரூபாய் கொடுத்து ஸ்டிக்கர்கள் ஒட்டியுள்ளனர். வில்லியரேந்தல், வன்னிகோட்டை, வன்னிகோட்டை காலனி உள்ளிட்ட கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் தலா ஐம்பது ரூபாய் வசூலித்து, பச்சை நிறத்தில் மின் இணைப்பு எண் கொண்ட ஸ்டிக்கர்களை அந்தப் பெண்கள் ஒட்டியுள்ளனர். ஏற்கனவே மின்வாரியம் சார்பில் நீல நிற ஸ்டிக்கர்கள் இலவசமாக ஒட்டிய நிலையில், இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விசாரித்தபோது ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதனிடையே, கிராம இளைஞர்கள் தேடியபோது பெண்கள் இருவரும் மாயமாகினர்.

Breaking | DMK | Congress | வராத காங்., அடுத்த திருப்பம் - CM ஸ்டாலின் எடுக்க போகும் முடிவு..?

BREAKING || காத்திருக்கும் திமுக - வராமல் கடைசி நேரத்தில் காங். தனி மீட்டிங்-பரபரக்கும் அரசியல் களம்

TN Congress | TN Election | தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்? | சட்டென செல்வப்பெருந்தகை கொடுத்த பதில்

Breaking | Bihar CM | Nitish Kumar | முதல்வர் ராஜினாமா? | பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு

Breaking | DMK Alliance | இறுதியாகும் சீட்? | அண்ணா அறிவாலயத்தில் விறுவிறுக்கும் பேச்சுவார்த்தை