தமிழ்நாடு

தற்கொலை செய்யப் போவதாக ஆட்சியரிடம் பழ வியாபாரி மிரட்டல்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்த்த சாலையோர பழ வியாபாரி சந்தியாகு கடந்த 7 ஆம் தேதி மதுரைக்கு பழங்கள் கொள்முதல் செய்ய வந்து உள்ளார்.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்த்த சாலையோர பழ வியாபாரி சந்தியாகு கடந்த 7 ஆம் தேதி மதுரைக்கு பழங்கள் கொள்முதல் செய்ய வந்து உள்ளார். அப்போது பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் சந்தியாகுவிடம் இருந்து 77 ஆயிரத்து 100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்கள் ஒப்படைத்தும் பணத்தை திருப்பி வழங்காமல் பறக்கும் படை அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தனது புகாரை தெரிவித்த சந்தியாகு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்