தமிழ்நாடு

1 மாதமாக பாம்பு கடித்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்

தந்தி டிவி

மானாமதுரை அருகே உள்ள மிளகனுரை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆதி ஈஸ்வரன். இவரை, ஒரு மாதம் முன்பு உயிருக்கு போராடிய நிலையில், அதிகாலை 5 மணிக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாம்பு கடித்த‌தை கண்டுபிடித்தனர். உடனடியாக விஷ முறிவு மருத்துகள் கொடுத்து, செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளித்தனர். சிறிது நாட்களுக்குப் பின் மூச்சு குழாயில் துளையிட்டு, சுவாசம் வழங்கப்பட்டது. மருத்துவர்கள் குழு ஒரு மாதமாக தனி கவனம் செலுத்தி, தொடர் சிகிச்சை அளித்து கண்காணித்த‌தால், திருக்குறள் சொல்லி விளக்கம் அளிக்கும் அளவுக்கு கணமடைந்துள்ளார். மருத்துவர்கள் குழுவுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். சிறுவன் குணமடைய காரணமாக இருந்த மருத்துவக் குழுவை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் சத்தியபாமா பாராட்டினார்.

CM Vijay | Ministers | நாளையே புதிய அமைச்சர்கள் பதவியேற்பு? - ட்விஸ்ட்டுடன் லிஸ்ட்

BREAKING || தமிழக அரசியலில் 59 ஆண்டுகளுக்கு பின் புது வரலாறு

CM Vijay | TN Police | Chennai |வேட்டையில் இறங்கிய TN போலீஸ்.. சென்னையில் ஒரேநாளில் 133ரவுடிகள் கைது

TN Govt | Medical Strike | தமிழ்நாடு முழுவதும் நடந்த மெடிக்கல் முழு அடைப்பு போராட்டம் நிறைவு

BREAKING || CM VIJAY | முதல்வரானதும் விஜய் போட்ட முதல் கையெழுத்து - இன்று நடந்த அதிரடி மாற்றம்