தமிழ்நாடு

குப்பையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்த ஊ.ம தலைவர்

தந்தி டிவி

சிவகங்கையில், குப்பையில் கிடந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப ஒப்படைத்த இரண்டு பெண் தூய்மை பணியாளர்கள், கிராம சபை கூட்டத்தில் வைத்து கவுரவிக்கப்பட்டனர்.

நாலுகோட்டையை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது வீட்டு சுப நிகழ்ச்சிக்காக ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை ஒரு துணிப்பைக்குள் போட்டு வீட்டினில் வைத்துள்ளார். இது தெரியாத குடும்பத்தினர், துணிப்பையை குப்பையில் போட்டுள்ளனர். குப்பைகளை தரம் பிரிக்கும் போது தூய்மை பணியாளர்களான சாந்தி, முத்து இருளாயி ஆகியோர் இதனை கண்டு எடுத்தனர். பிறகு ஊராட்சி மன்ற தலைவரிடம் பணத்தை ஒப்படைத்தனர். நேர்மையாக செயல்பட்ட அவர்களை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

CM Vijay | Ministers | நாளையே புதிய அமைச்சர்கள் பதவியேற்பு? - ட்விஸ்ட்டுடன் லிஸ்ட்

BREAKING || தமிழக அரசியலில் 59 ஆண்டுகளுக்கு பின் புது வரலாறு

CM Vijay | TN Police | Chennai |வேட்டையில் இறங்கிய TN போலீஸ்.. சென்னையில் ஒரேநாளில் 133ரவுடிகள் கைது

TN Govt | Medical Strike | தமிழ்நாடு முழுவதும் நடந்த மெடிக்கல் முழு அடைப்பு போராட்டம் நிறைவு

BREAKING || CM VIJAY | முதல்வரானதும் விஜய் போட்ட முதல் கையெழுத்து - இன்று நடந்த அதிரடி மாற்றம்