பெண்களுக்கு 'சிங்கப்பெண்' அதிரடிப்படை விழிப்புணர்வு பிரசாரம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில், பெண்களின் பாதுகாப்பு குறித்து சிங்கப்பெண் அதிரடிப்படை காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் பேசிய காவல் உதவி ஆய்வாளர், பெண்கள் பவுடர், லிப்ஸ்டிக் வைத்திருப்பதைப் போலவே தற்காப்புக்காக பெப்பர் ஸ்பிரேவும் வைத்திருக்க வேண்டும் என்றும், ஆபத்து ஏற்பட்டால் அதை பயன்படுத்தி தப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், சிறுமிகளுக்கு கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை கற்றுக் கொடுக்க பெற்றோர் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பெண்களிடையே வரவேற்பைப் பெற்றது.