மன்னராட்சி காலத்தில் முடிசூடிய தமிழகத்தின் கடைசி ராஜாவும், நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31 ஆவது ராஜாவுமான சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி காலமானார். பாபநாசத்தில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில், தொடர்ந்து 77 வருடங்களாக ராஜஉடையில் தர்பாரில் காட்சியளித்து வந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி ஜமீன். 89 வயதான நிலையில், வயது முதிர்வு காரணமாக அவர் காலமானார்.