chennai | silverstone | storeopening சென்னை மடிப்பாக்கத்தில் சில்வர் ஸ்டோரின் 3வது கிளை திறப்பு #chennai #silverstone #storeopening #madipakkam சென்னை மடிப்பாக்கம் மேடவாக்கம் பிரதான சாலையில், சில்வர் ஸ்டோரின் 3-வது கிளை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இயக்குநர்கள் நிகில் ஜெயின், அபிஷேக் மற்றும் பாரத் லோதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி புதிய கிளையை திறந்து வைத்தனர். ஏற்கனவே வளசரவாக்கம் மற்றும் நெசப்பாக்கத்தில் 2 கிளைகள் செயல்பட்டு வரும் நிலையில், சென்னையில் தனது விரிவாக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய கிளையை தொடங்கியுள்ளது.இந்த புதிய கிளையில் வெள்ளிப் பொருட்கள், வெள்ளிப் பாத்திரங்கள், வெள்ளி நகைகள், கொலுசுகள், 999 தூய்மை கொண்ட வெள்ளிக் காசுகள் மற்றும் வெள்ளிக் கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.திறப்பு விழாவையொட்டி சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட வெள்ளிப் பொருட்களுக்கு ஒரு கிராமுக்கு 10 ரூபாயும், 999 தூய்மை கொண்ட வெள்ளிக் காசுகள் மற்றும் கட்டிகளுக்கு ஒரு கிராமுக்கு 5 ரூபாயும் குறைப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட பொருட்களுக்கு செய்கூலி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.