தமிழ்நாடு

சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் - எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக வீடியோ வெளியிட்டதாக 2 வழக்குகளின் கீழ் தணிகாச்சலம் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி தணிகாச்சலம் தாக்கல் செய்த மனு, எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின்துரை முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் விளக்கத்தை ஏற்ற நீதிபதி, சென்னையை விட்டு வெளியேறக் கூடாது என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார். தணிக்காச்சலம் மீது மேலும் இரு வழக்குகள் மற்றும் குண்டர் சட்டம் உள்ளதால், தற்போது சிறையில் இருந்து விடுதலையாக முடியாது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்