தமிழ்நாடு

குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த சதி திட்டம் : பெங்களூருவில் சிக்கிய தீவிரவாதிகள் அதிர்ச்சி தகவல்

ஆயுத கடத்தலை தடுத்ததால், களியக்காவிளை எஸ்ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

குமரி மாவட்டம் களியக்காவிளையில், காவல் உதவி ஆய்வாளர் வில்சனை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆயுதங்களை தீவிரவாதிகள் கடத்த முயன்றபோது வில்சன் தடுத்ததால் அவரை கொன்றதாக தெரிய வந்துள்ளது. பெங்களூருவில் பிடிபட்ட தெளபிக், அப்துல் சமீம் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். மேலும், வருகிற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி மற்றும் குஜராத்தில் 17 பேர் கொண்ட குழுவுடன் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாகவும், அந்த 17 தீவிரவாதிகளில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்