கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தவுபீக் ஆகியோர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் காணொலி காட்சி மூலம் நாகர்கோவில் மாவட்ட அமர்வு பொறுப்பு நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவருக்கும் மேலும் ஒரு மாத காலம் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி , அவர்களை அடுத்த மாதம் 13ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.