தமிழ்நாடு

கெட்டுபோன மாவு : தட்டிக்கேட்ட எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்

நாகர்கோவில் அருகே கெட்டுபோன தோசை மாவு குறித்து தட்டிக்கேட்ட பிரபல எழுத்தாளர் ஜெயமோகனை கடைக்காரர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
அங்குள்ள பார்வதிபுரத்தில் வசித்து வரும் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், ஒரு கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று மாவு பாக்கெட்டைப் பார்த்தபோது அது மிகவும் கெட்டுப்போய் இருந்துள்ளது. இதையடுத்து, தோசை மாவை அதே கடையில் கொண்டு கொடுத்துவிட்டு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக கடைக்காரருக்கும் எழுத்தாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த கடைக்காரர் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியுள்ளார். இதனால், காயமடைந்த ஜெயமோகன் தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கடைக்காரர் செல்வத்தை கைது செய்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்