தமிழ்நாடு

கேரளா நிவாரணம் : மகளின் ஆசையை நிறைவேற்றிய துணிக்கடை உரிமையாளர்

விழுப்புரத்தில் துணிக்கடை உரிமையாளர் ஒருவர், தமது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த அனைத்து புதுத்துணிகளையும் கேரள மக்களுக்கு வழங்கியுள்ளார்.

தந்தி டிவி

விழுப்புரம் அருகேயுள்ள ஏனாதிமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலகுரு. இவர் அதே கிராமத்தில் மதுமிதா சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தநிலையில், கடையில் உள்ள துணிகளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு வழங்கி விடலாம் என பாலகுருவிடம் அவரது மகள் மதுமிதா வேண்டுகோள் வைத்துள்ளார். மகளின் வேண்டுகோளை ஏற்ற பாலகுருவும் கடையில் இருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புடைய புத்தாடைகள் அனைத்தையும் கேரள மக்களுக்காக அனுப்பி வைத்தார். பாலகுருவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்