தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை - நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்

நெல்லை டவுனில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

நெல்லை பழையபேட்டையை அடுத்த சர்தார் புரத்தைச் சேர்ந்தவர் சுடலை. ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 3ஆம் தேதி இரவு நெல்லை டவுன் ஆர்ச் அருகே மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்த வந்த நிலையில், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை சர்தார் புரத்தைச் சேர்ந்த முருகன் என்ற பெயரையுடைய இருவர் சேர்ந்து, சுடலையை வெட்டி கொலை செய்தது, விசாரணையில் தெரியவந்தது. இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் என்பவருடைய மனைவியுடன் ஏற்பட்ட தவறான தொடர்பால் சுடலை வெட்டி கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, சிசிடிவி கேமராவில் பதிவான பதறவைக்கும் இந்த கொலை சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அரிவாளால் பல முறை வெட்டியும், சுடலை உயிரை காப்பாற்றி கொள்ள கடுமையாக போராடுவதும், சாலையில் செல்பவர்கள் அவரை காப்பாற்றாமல் செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்