தமிழ்நாடு

கவின் கொலை வழக்கில் திடீர் பகீர் - நீதிபதியிடம் பயத்தில் கதறிய தந்தை, மகன்

தந்தி டிவி

கவின் கொலை வழக்கு - நீதிபதியிடம் தந்தை, மகன் பரபரப்பு புகார்

கவின் ஆணவக்கொலை வழக்கில், சிபிசிஐடி போலீசார் தங்களை தாக்க முயன்றதாக நீதிபதியிடம் தந்தை, மகன் தெரிவித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

சுர்ஜித்துக்கும், அவரது தந்தை உதவி ஆய்வாளர் சரவணனுக்கும் 2 நாட்கள் போலீஸ் காவல் முடிந்த‌து.

இதையடுத்து, அரசு மருத்துவமனையில் உடல்நல பரிசோதனை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது, சிபிசிஐடி போலீசார் தங்களை தாக்க முயன்றதாக, நீதிபதி ஹேமாவிடம் தந்தை, மகன் புகார் தெரிவித்தனர்.

மேலும், தாங்கள் அளிக்காத வாக்குமூலத்தை எழுதி, அதில் போலீசார் கையெழுத்து கேட்டதாகவும், நீதிபதியிடம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, இருவரையும், 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.

இதனிடையே, தடயங்களை அழித்ததாக கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் உறவினரின் மகன் ஜெயபாலனையும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

அவரையும் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, 3 பேரையும், பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்