தமிழ்நாடு

திடீரென மாயமான சிறுவன் செப்டிக் டேங்க் தொட்டியில் சடலமாக கிடந்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன் மகன் சந்தோஷ். பத்தாம் வகுப்பு மாணவரான இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவர் இரவில் திடீரென காணாமல் போனார். சந்தோஷை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தந்தை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தேடிவந்த நிலையில், விருத்தகிரி என்பவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டு வந்த செப்டிக் டேங்க் தொட்டியில் சந்தோஷ் சடலமாக மிதப்பதாக தகவல் வந்தது. அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் செப்டிக் டேங்கில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் சிறுவனை கொலை செய்து தொட்டியில் போட்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு