தமிழ்நாடு

Kallakurichi DSP Issue| கள்ளக்குறிச்சி DSP மீது பெண் பகீர் புகார்.. புரட்டி போட்ட DSP-யின் விளக்கம்

கள்ளக்குறிச்சி DSP மீது பெண் பகீர் புகார்.. புரட்டி போட்ட DSP-யின் விளக்கம்

thanthitv

``விசாரணையின் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்’’ - கள்ளக்குறிச்சி DSP மீது பெண் பகீர் புகார்.. புரட்டி போட்ட DSP-யின் விளக்கம்

கள்ளக்குறிச்சி டிஎஸ்பி அலுவலகத்தில் வழக்கு விசாரணைக்கு சென்றபோது, டிஎஸ்பி தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், இந்த புகாரை கள்ளக்குறிச்சி டிஎஸ்பி மறுத்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட‌தாக கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்ட‌தாக பெண் புகார் தெரிவித்த‌து பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, பெண்ணின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என மறுத்துள்ள கள்ளக்குறிச்சி டிஎஸ்பி, மற்றொரு பெண் மீது வழக்குப்பதிவு செய்ய நிர்பந்தித்ததாகவும், முகாந்திரம் இன்றி வழக்குப்பதிவு செய்ய முடியாது என தெரிவித்த‌தால், தன் மீது இதுபோன்று புகார் அளித்துள்ளதாக விளக்க மளித்துள்ளார்

Chennai | மழைநீர் வடிகால் பள்ளத்தில் இருந்த கம்பியில் குத்தி பலியான இளைஞர்

அடி வெளுக்கப்போகும் மழை ரெடியா மக்களே?

BREAKING || விவசாயிகளுக்கு வந்த நல்ல செய்தி

Periyar Library | பூதமாய் கிளம்பிய பெரியார் நூலக விவகாரம் - அடுத்த ஸ்டெப் வைத்த லஞ்ச ஒழிப்புத் துறை

BREAKING || 2 MLA-க்களையும் கடைசியாக அழைத்த CM விஜய் - கண்சிவக்க சொன்ன வார்த்தை