கல்லறையில் பதுக்கல் - ரூ.5 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
நாகையில் கல்லறையின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்ட, 5, லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50,கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; இலங்கைக்கு கடத்த இருந்தபோது, கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் சிக்கியது;
நாகப்பட்டினத்தில் இருந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நாகை சால்ட்ரோட்டில் உள்ள குடியிருப்பு மற்றும் அங்குள்ள கல்லறை பகுதிகளுக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு அதிரடியாக சுற்றி வளைத்தனர்.
போலீசார் வருவதை கண்ட கடல் அட்டை வியாபாரி மற்றும் அட்டைகளை பதப்படுத்தி கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கல்லறை உள்ளே சென்று போலீசார் சோதனை மேற்கொண்ட போது, அங்கு கல்லறை காம்பவுண்ட் சுவற்றின் அருகே தார்பாயால் மூடப்பட்டிருந்த பெட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த தார்பாயை பிரித்து பார்த்த போது அதில் 2 பெட்டிகளில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதிக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 2, பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5, லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்புக் குழு போலீசார் பறிமுதல் செய்தனர்,
அதனைத் தொடர்ந்து பிடிபட்ட 50, கிலோ கடல் அட்டைகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார், வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்
முதற்கட்ட விசாரணையில், தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை நாகையில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு சென்று அங்கிருந்து இலங்கைக்கு படகுமூலம் கடத்தல்காரர்கள் இதனை கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தாகவும் தெரியவந்துள்ளது.
நாகையில் 5, லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50, கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பிடிபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.