தமிழ்நாடு

காவலரே களவாணியான அதிர்ச்சி..! கைதிகளின் சம்பளம் சுருட்டல்

தந்தி டிவி

காளையார் கோவில் அருகே உள்ள புரசடை உடைப்பு திறந்தவெளி சிறையில் கைதிகளுக்கு தரவேண்டிய சம்பள பணத்தை கையாடல் செய்த புகாரில் காவலர் அலெக்ஸ் பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின் கீழ் உள்ள காளையார்கோவில் திறந்தவெளி சிறையில், நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக தினமும் சம்பளம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த தணிக்கை ஆய்வில், விடுதலையாகி சென்ற கைதிகளுக்கு சம்பளம் வழங்காதது தெரியவந்தது. இது குறித்து மதுரை சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் விசாரித்த போது, சம்பளம் வழங்கும் பணியை கவனித்த காவலர் அலெக்ஸ் பாண்டியன் 2 லட்சம் ரூபாய் வரை கைதிகளுக்கு தராமல் தன் தேவைகளுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு