தமிழ்நாடு

எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் ஊழியரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்

எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் ஊழியரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் ஊழியரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்தில் இருந்து மார்ச்13 ஆம் தேதி சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு விஷ்வ விஜய் என்ற கப்பல் வந்துள்ளது. மத்திய அரசு நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பலில் பணியாற்றிய உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த தலைமை இயந்திர அதிகாரி நரேஷ்குமாரை 14 ஆம் தேதி முதல் காணவில்லை என கூறப்படுகிறது. கப்பல், எண்ணுார் துறைமுகம் வந்தடைந்ததும் முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. கப்பலில் நரேஷ் குமார் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் கப்பல் நிறுவன மேலாளர் புகார் அளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்