தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது...

நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தி டிவி
நெல்லை வள்ளியூரில், அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் நாகர்கோவிலை சேர்ந்த டேவிட் என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அங்கு படிக்கும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் தமிழாசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில், டேவிட்டை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார், வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்