ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, மினி பஸ் நடத்துனரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மினி பேருந்து நடத்துனர் மணிகண்டன், பேருந்தில் பயணம் செய்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.