தமிழ்நாடு

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாயனூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி கடந்த 2018ல் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் முத்துசாமி கைது செய்யப்பட்டார். கரூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, முத்துசாமிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து முத்துசாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்