தமிழ்நாடு

6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் - அதிரடி காட்டிய நீதிமன்றம்

தந்தி டிவி

6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த பள்ளி தலைமையாசிரியருக்கு இரட்டை ஆயுள், 47 வருட சிறை.69 ஆயிரம் அபராதம்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 வருட சிறைதண்டனை ரூ69 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு சார்பில் ரூ29 லட்சம் இழப்பீடு வழங்கவும் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காளையார்கோவிலை அடுத்துள்ள பெரியநரிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தவர் முருகன். இவர் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயின்றுவந்த சிறுமிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவகங்கை அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கானது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் தலைமையாசிரியர் முருகன் மீதான குற்றம் நிருபீக்கப்பட்ட நிலையில் அதற்கான தீர்ப்பை நீதிபதி சரத் ராஜ் உத்தரவிட்டார். அதில் தலைமையாசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 47 ஆண்டு சிறை தண்டனையும் அதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டதுடன் ரூ69 ஆயிரம் அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ரூ29 லட்சம் இழப்பீடும் அரசு தரப்பில் வழங்கவும் உத்தரவிட்டார். 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தலைமையாசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 47 வருட சிறை தண்டனையும் ரூ69 ஆயிரம் அபராதமும் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு