#chennai #thanthitv சென்னை அமைந்தகரையில் 24 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அவதூறாக பேசி தாக்கிய சேதுபதி என்பவரை போலீசார் கைது செய்தனர். அமைந்தகரையில் வசித்து வரும் இளம்பெண்ணிடம் சேதுபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் 10ம் தேதி சேதுபதி, அவரது தோழி மற்றும் மற்றொரு பெண் சேர்ந்து, அப்பெண்ணை அவதூறாக பேசி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரில் சேதுபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2 பெண்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாய்ந்துள்ளது.