தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, 10 ஆண்டு சிறை

கிருஷ்ணகிரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன எலசகிரி கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர், கடந்த 2015ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்து 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, சிறுமியின் தாயார், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பாஸ்கர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பாஸ்கர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றவாளி பாஸ்கருக்கு பாலியல் வன்கொடுமைக்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி