தமிழ்நாடு

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை புகார் : சிறப்பு டிஜிபி மீதான வழக்கு... 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கில், 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

தந்தி டிவி

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கில், 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை தந்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதனிடையே, வழக்கில் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால், வழக்கை, சிபிஐக்கு மாற்றுமாறு சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி. மனு அளித்து இருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக 50 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அரசு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்