தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அருகே பாலியல் தொந்தரவு புகார் - மாணவி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே பாலியல் தொந்தரவு புகார் - மாணவி உயிரிழப்பு

thanthitv

கள்ளக்குறிச்சி மாவட்டம் தெங்கியாநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவிக்கு, அதே பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஜெகதீசன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி, வீட்டில் களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இதனிடையே, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் ஜெகதீசனை, கச்சிராயபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

#kallakurichi #school #student #abuse #thanthitv

BREAKING | உயிர் நண்பன் இந்தியாவுக்காக டெல்லியில் புதின் - உலகமே உற்றுநோக்கும் மீட்டிங்

TN Govt | RTO | License | "நாளை முதல் அமல்.." - தமிழக அரசு உற்சாக அறிவிப்பு

BREAKING | "பட்டினப்பாக்கம், நீலாங்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதியில்லை"

Thirumavalavan | VCK | "என்னை முதல்வராக்க திட்டமிட்டார் ஆதவ்.." திருமா

Solomon Pappaiah | TN Governor | "பேரிழப்பு.." - சாலமன் பாப்பையா மறைவு.. ஆளுநர் இரங்கல்