தமிழ்நாடு

பாலியல் தொல்லை புகார் விவகாரம்...சென்னை உயர் நீதிமன்றம் ரத்து ...

தந்தி டிவி

பாலியல் புகாரில், கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் மணிமேகலன் சஸ்பெண்ட் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் மணிமேகலன் மீது, இரு பெண் உதவி பேராசிரியர்கள், பாலியல் தொல்லை புகார் அளித்ததைத் தொடர்ந்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்யக்கோரி, மணிமேகலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், முழுமையாக விசாரணை நடத்தி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே பணியிடை நீக்கம் செய்ய முடியும் எனவும், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வைத்து பணியிடை நீக்கம் செய்தது தவறு எனக்கூறி, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தார். அதேபோல், பாரதியார் பல்கலைக்கழகத்தில் மூத்த பெண் பேராசிரியர்கள் பலர் இருக்கும் நிலையில், இளையோரை கொண்ட உள் புகார் குழு அமைத்தது தவறு என கூறிய நீதிபதி, சட்டப்படி குழுவை மாற்றியமைத்து விசாரணை நடத்தி பல்கலைக்கழகத்திடம் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்