தமிழ்நாடு

சிகிச்சைக்கு சென்ற இடத்தில் சில்மிஷம்... லேடி டாக்டருக்கு டார்ச்சர்... சிக்கிய பாஜக பிரமுகர்

தந்தி டிவி

நாகர்கோயிலில் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக பிரமுகர் கைது கைது செய்யப்பட்டார்.

vovt

நாகர்கோயிலை அடுத்த பார்வதிபுரத்தில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவர், கோட்டாறு அருகே ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது, பெண் மருத்துவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், பெண் மருத்துவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில், கோட்டார் காவல் நிலைய போலீசார், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர். கடந்த 2022-ஆம் ஆண்டு, ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரிடம் பண மோசடியில் ஈடுபட்டது உட்பட ஜெயக்குமார் மீது பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே ஆண்டு குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், நீண்ட நாட்கள் சிறையில் இருந்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளில் செயல்பட்ட இவர், சமீபத்தில் பாஜகவில் இணைந்து பாஜக பிரமுகராக வலம் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில்தான், பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதாகி உள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்